
வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு
மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.4 அலகுகளாக வெள்ளவாய – புத்தல – பல்வத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நாட்டின் அனைத்து நில அதிர்வு அளவீடு நிலையங்களிலும் இந்த நடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.11 மணியளவில் குறித்த பகுதியில் 3 அலகுகளாக ரிக்டர் அளவுகோலில் சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
12.39 அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி : வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம்
