நாய்களுக்கான கருத்தடை திட்டம் மூலம் நாய்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

வெறிநாய் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படவிருந்த நாய்களுக்கான கருத்தடை திட்டம் நிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எல்.டி. கித்சிறி அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் நாய்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக இலங்கையில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின செயற்பாட்டாளர் சங்கங்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.