
உயர்தர பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்க கூடாது என கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு
உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.
மின்வெட்டைத் தடுக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட உரிய மனுவில் கோரப்பட்டுள்ளது.