உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு பிற்போட்டுள்ளது

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.