வேட்டையாட சென்றவர் கைது

-திருகோணமலை நிருபர்-

வேட்டையாடுவதற்காக கட்டுத்துவக்குடன் வயல் வழியாக பயணித்த நபரொருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் வரோதயநகர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எஸ். தயாளன் (42வயது) என்பவர் மேசன் வேலை செய்து வந்ததாகவும் தொழில் இல்லாமையினால் வேட்டையாடுவதற்காக வந்ததாகவும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மொரவெவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தியதுடன்,  குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.