
கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்
மாமனார் மற்றும் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டையில் மாமனார் மருமகனினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஹட்டனில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் திக் ஓயா ஒடாரி தோட்டத்தைச் சேர்ந்த கருபன் காமராஜன் (62) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறிய நிலையில் மருமகன் மாமனாரை தள்ளியதில் கீழே தவறி விழுந்த அவர் தலையில் பலத்த அடிபட்டதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
