சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கான மகிழ்ச்சியான செய்தி

நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதாக பரிஸ் கிளப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.

மேலும், நிதி உறுதிப்பாடுகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைப் பெறுவதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இணைந்து இலங்கை செயற்பட்டு வருவதாக நிதியத்தின் பேச்சாளர் டீன் யாங் தெரிவித்தார்.

போதுமான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி நிறைவேற்றுச் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்