
ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுத்த குடும்பத்தினர்
பிரபல தொழிலதிபர் தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே முரண்பாடுகள் காரணமாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுப்பதாக ஷாஃப்டரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
