கடலில் மிதந்து வந்த பெண்ணொருவரின் சடலம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

இந்த சடலமாக காணப்படும் பெண் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.