
மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு
வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.
கினிகத்தனை – பேரகஹமுல பகுதியிலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
50 வயதான தாயும், 30 வயதான அவரது மகளுமே இவ்வாறு மீட்கப்பட்டன.
50 வயதான குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது மகன் கொழும்பில் பணியாற்றுகின்றனர்.
இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
