மேலும் 4 பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 4 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி மற்றும் ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சையரிசி என்பவற்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை முறையே 164 மற்றும் 179 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் வெள்ளை நாடு ஒரு கிலோ 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபா

ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 305 ரூபா என லங்கா சதொச அறிவித்துள்ளது.