அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 08 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

வரி விவகாரம் தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்திடம் உரிய தீர்வு கிடைக்கவில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.