
மின்வெட்டு தொடர்பான மீள்பரிசீலனை இன்று
மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு வர்த்தக சபை உறுப்பினர்கள்இ தொழில் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள்இ சமூக ஆர்வலர்கள்இ அரசியல் பிரதிநிதிகள் என அனைவரும் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக்களை மீளாய்வு செய்த பின்னர் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளைஇ உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வியாழக்கிழமை மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அண்மையில்இ இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதுஇ இந்த மனுவை தாக்கல் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு மின்சார சபை கோரியது.
அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 3ஆம் திகதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது
