
பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே புகார்
பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி வசந்த முதலிகே உள்ளிட்டோரை பிணைக் கைதிகளாக வைத்திருந்தமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீடுகளுக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
