லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 5,280 ரூபாவாக விற்பனை செய்யப்படும்

முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, சந்தையில் 5080 ரூபாவாக காணப்பட்டது.

5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 2112 ரூபாவாகும்.

அத்துடன், 2 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையும் 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 845 ரூபாவாக அதிகரித்துள்ளது.