பெண் அந்தரங்க உறுப்பு சிதைத்து வஞ்சக் கொலை : சிறுவன் கைது

58 வயதான பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஹனுமானா பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

இந்த பெண்ணின் கணவரும் மகனும் இரண்டு வாரங்களாக ஊரில் இல்லாத சந்தர்ப்பம் பார்த்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார் இதனை திட்டமிட்ட படுகொலையா? பாழிவாங்கும் நோக்கில் இடம்பெற்ற கொலை என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு 14 வயது சிறுவன் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த கையடக்க தொலைபேசியை திருடியதாகவும், அதையடுத்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணும் , குடும்பத்தாரும் அவனை கடுமையாக கண்டித்ததாகவும் தெரியவருகின்றது.

இதையடுத்து அந்த சிறுவன் அன்று தொடங்கி பெண்ணை பழிவாங்கப் போகிறேன் என தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளான். இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான்… இரண்டு ஆண்டுகள் கழித்து தனது ஆத்திரத்திற்கு பழி தீர்க்கும் விதமாக கொடூர செயலில் அவன் ஈடுபட்டுள்ளான்.

பெண்ணின் கணவரும், மகனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சிறுவன், ஜனவரி 30ஆம் திகதி இரவு வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பெண் அப்போது தனிமையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். பெண்ணை பிடித்து அவரது கை கால்களை கட்டிப்போட்டு கூச்சலிட்டும் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக வாயையும் பொலித்தீனை வைத்து அடைத்துள்ளான்.

பின்னர் அருகே உள்ள காலியான கட்டடத்திற்கு தூக்கிச் சென்று அங்கு கூர்மையான ஆயுதங்களை வைத்து தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.

மேலும், பெண்ணின் அந்தரங்க உறுப்பை ஆயுதங்கள் மூலம் சிதைத்துள்ளான். பெண்ணிடம் இருந்த நகைகளை திருடி தப்பியோடி தலைமறைவாக இருந்த அந்த 16 வயது சிறுவனை ரேவா மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் இச்செயல் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.