
வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது
-யாழ் நிருபர்-
வலி. வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கடற்படை மற்றும் இராணுவத்தின் பிடியில் இருந்த J/234, J/246, J/245 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் விடுவிக்கப்பட்ட காணி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுமந்திரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி வி கே சிவஞானம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




