மட்டக்களப்பு ஏறாவூரில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குல்

 

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராக்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இனம்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் வசிப்பவர்கள் பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என அவரின் நண்பர்களுடன் இணைந்து போதை பொருள் வியாபாரிகள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார்

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று குறித்த வீட்டின் உரிமையாளரும் அவரது தாயாருமாக இரு பெண்கள் நித்திரைக்கு சென்ற நிலையில் 12 மணியளவில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொண்டதையடுத்து வீட்டின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எதுவிதமான காயம் ஏற்படவில்லை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.