அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகன்
அகலவத்தை – ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறியதால் குறித்த நபர் தனது தாயாரை தாக்கியுள்ளார்.
பேருந்து சாரதியான குறித்த நபரின் வீட்டில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்கத்தில் உள்ள அவரது தாயாரின் வீட்டிக்கு உடைகளை அயன் செய்ய சென்றுள்ளார்.
அதன்போது, 66 வயதான அவரது தாய் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் வீட்டில் மின் அழுத்தியை பாவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மகன் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சந்தேகநபரான 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.