விசேட அதிரடிப் படைக்கு சொந்தமான 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

காலி – கொழும்பு பிரதான வீதியில் விசேட அதிரடிப் படைக்கு (STF) சொந்தமான 3 பேருந்துகள், ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை காலி – கொழும்பு பிரதான வீதியில், பாணந்துறை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பயணித்த பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்தவர்கள், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.