வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

70 – 80 வயதுக்கு  இடைப்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்