இன்று முதல் மீண்டும் மின்வெட்டு?

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று புதன்கிழமை முதல் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் அண்மைய நாட்களாக போதிய மழை பெய்யாமையே இதற்குக் காரணம் என மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலாந்த தனபால தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு கூடுதல் தண்ணீர் வழங்க நீர் முகாமைத்து செயலகம் உடன்பட்டதால்  கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு ஏற்படவில்லை.

எவ்வாறாயினும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைய  நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்கவில்லையென மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

அதன்படி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது