உலக வங்கியின் முன் நடவடிக்கைகள் குறித்த தொடர் கலந்துரையாடல்
முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் முன் நடவடிக்கைகள் குறித்த தொடர் கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிகாரிகளின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு, உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் மேலாண்மையை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், வரி நிர்வாகக் கொள்கைகள், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோக முறை மற்றும் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய பூர்வாங்க நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
அவற்றை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.