நாடு முழுவதும் கனமழை
தென்மேற்கு வங்காள வரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நேற்றிரவு நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு, தென்மேற்கு திசையாக நோக்கி நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை காலை இலங்கையின் கிழக்குக் கரையை அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே, நாட்டில் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான மிக பலத்த மழை பெய்யக் கூடும்.
அதேவேளை வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக காணப்படும்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இடியுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.