ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சாரதி : விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த புகையிரதத்தின் சாரதி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சம்பவம் தொடர்பில் புகையிரத திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்காரணமாக கிருலப்பனை நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் நுகேகொட நிலையத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன்,  சில பயணிகள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.