உடல் உறுப்பு கடத்தல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரகக் கடத்தலில் தரகர் போல் நடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் வெல்லமிபிட்டிய பிரதேசத்தில் வைத்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுநீரகத்தை பறித்த சம்பவம் தொடர்பில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் பொரளை பொலிஸில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.