மதுபோதையில் நடமாடிய பிக்கு மாணவர்கள் கைது

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடை அணிந்த 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கண்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இக்குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் பிக்குகள் என குறித்த குழுவினர் கூறியதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் தங்காலை, காலி, பிரிமத்தலாவ மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் வசிப்பவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.