சட்டவிரோத கையடக்கத் தொலைபேசி இறக்குமதி
சட்டவிரோத தொலைபேசி கடத்தல் நடவடிக்கையால் கையடக்க தொலைபேசி வணிகங்கள் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள எனினும் பின்னணியில் சில குழுக்கள் சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை பார்சல் வடிவில் இறக்குமதி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நாடு பெருமளவு வரிப் பணத்தை இழக்க நேரிடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.