நீர்த்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அருகில் இருந்தே ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என சடலத்தின் அருகில் இருந்த பணப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.