
இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு
இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டில் சுயவிபரத் தகவல்கள் அடங்கிய மின்னணு அட்டை (chip) சேர்க்கப்படும் என்றும், இந்த முறையை உலகின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
