
பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்ய விசேட இலக்கங்கள்
நிர்வாக வேலைத்திட்டத்தின் பிரகாரம் தினசரி மின்வெட்டு இடம்பெறுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தினசரி மின்வெட்டு காரணமாக 331,000 உயர்தர மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 077 5 687 387 என்ற எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ அல்லது 011 2 392 641 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொலைநகல் மூலமாகவோ புகார் செய்யலாம்.