
இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்
இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ சமரதிவாகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சூலானந்த பெரேராவின் நியமனம் அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் ஜனவரி 20 முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
