
விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கை விஜயம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவில் கவனம் செலுத்துவார்.
இலங்கை மற்றும் அமெரிக்க உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் துணைச் செயலாளரின் நாட்டிற்கான விஜயமும் அமையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளம் தெரிவிக்கினறது.
அவர் இலங்கைக்கு மேலதிகமாக நேபாளம், இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
