
மீற்றர் வட்டி விவகாரம் : மேலும் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
மீற்றர் வட்டிக்கு பணத்தினை வாங்கியவர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து தாக்குதலை மேற்கொள்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரும் நேற்றுவெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
