
குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வு ஆயத்தம் : குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குழந்தை ஒன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது.
புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென பால் புரையேறியது. இதனை அடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை குழந்தை பிறந்து 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
