பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சித்தியடைந்த மாணவன்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி வடக்கு வலயத்திற்குட்பட்ட முகமாலை கிளிஃமுகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக புலமைப் பரீசில் பரீட்சையில் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.

பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகமாலை கிளிஃமுகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதல் தடவையாக புலமைப்பரிசீல் பரீட்சையில் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 2022 தரம் 05ற்கான புலமைப் பரீசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 143 ஆக இருக்க குறித்த மாணவன் 147 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த மாணவன் கெளரீஸ்வரன் கபிஷயன் என்பவர் ஆவார்

முதல் தடவையாக சித்தி பெற்ற மாணவனை கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.