தடையின்றி மின் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையின்றி மின் விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்பதன் மூலம் தீர்க்கமான முடிவொன்றை எட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.