இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா சர்வதேச நாணயத்துக்கு அனுப்பிய கடிதத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதேபோன்று, சீனாவில் உத்தரவாதங்களைப் பெற சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. அத்துடன் பாரிஸ் கிளப் சீனாவின் மறுசீரமைப்பையே எதிர்பார்த்துள்ளது.

‘இலங்கை அதிகாரிகள் உட்பட, போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி-ஆதரவு திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழுவால் திறக்கப்படும், என தெரிவிக்கப்படுகின்றது.