500 போதை மாத்திரைகளுடன் 28 வயது இளைஞன் கைது

-கிளிநொச்சி நிருபர்-

pregasafe எனப்படும் 500 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே வல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி அரச புலனாய்வாளர்களின் தகவலிற்கு அமைய நெல்லியடி பொலிஸ் நிலய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப ரத்நாயக்க தலைமையில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஒரு மாத்திரை 250 ரூபா வீதம் விற்பனை செய்வதாக அரச புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸார் சந்தேக நபரை பருத்திதுறை நீதிமன்றிற்கு முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்