ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, நியூசிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது.

சமீபத்திய தரவரிசையின்படி, நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, அந்த நிலையில் அவுஸ்திரேலியா 04வது இடத்தில் உள்ளது.