சமுத்திராதேவி ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயில் தடம் புரண்டதால், கரையோர பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து வந்த சமுத்திராதேவி ரயில் இன்று திங்கட்கிழமை காலை களுத்துறை நிலையத்தில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையை வந்தடைய வேண்டிய இரண்டு புகையிரதங்கள் காலதாமதமாக செல்லும் என களுத்துறை புகையிரத நிலைய தகவல்கள் தெரிவித்தன.