இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (National Fuel Pass) திட்டத்தைப் பின்பற்றத் தவறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் அனுமதிச் சீட்டு முறையைப் புறக்கணித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், முறைமையை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
எரிபொருள் அனுமதிச் சீட்டு முறையைப் பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் நிறுத்தப்படும் அல்லது எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.