பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்
-யாழ் நிருபர்-
பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக யாழ்.நகர பகுதிகளிலும், நல்லூர் திருநெல்வேலி மத்திய சந்தைப்பகுதிகளிலும் மட்பாண்ட பொங்கல் பானையினை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலையுயர்வினையும் பொருட்படுத்தாது தமிழர்பொங்கலை கொண்டாடி சிறப்பிக்கவுள்ளனர்.