Last updated on April 28th, 2023 at 05:12 pm

உயர்தரப் பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது | Minnal 24 News

உயர்தரப் பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

பரீட்சை முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறும்.

பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், நாளாந்தம் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அமுல்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை காலத்திற்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.