மட்டக்களப்பில் கடந்த வருடம் 180 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்

 

கடந்த ஐந்து நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரியம்மன் கோயில் வீதி களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சோமசுற்தரம் சுரேஸ் (வயது 34), பலாச்சோலை வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி கண்ணதாஸன் (வயது 41) மற்றும் செட்டிபாளையம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தை  சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி வேலாயுதம் (வயது 75) ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மதுபோதை, குடும்பத்தகராறு மற்றும் உடல் நோய் போன்ற காரணங்களாலேயே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் 180 பேர், இவ்வருட ஆரம்பத்தில் ஐந்து நாட்களில் 03 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களாவார்கள்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க