
மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து : குடும்பஸ்தர் ஒருவர் பலி
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் ராயூக்காந்தி (35) என்பவரே இவ்விபத்தின் போது சம்பவ இடத்திலேயே பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து தனது உணவக தொழிலுக்காக தனது தந்தையுடன் துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருக்கும்போது வாழைச்சேனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பை நோக்கி சென்ற வான் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்..
மேலதிக விசாரணைகள ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.