ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் பாலையூற்று பகுதியில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யார் என்பதை இனங்காணவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க