
பேருந்து கட்டணங்கள் குறைப்பு?
டீசல் விலை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம், இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கட்டணங்களை திருத்துவது சாத்தியமா என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டோ தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளன.
பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலைக்கு அமைய தங்களது எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஒசி தெரிவித்துள்ளது.