மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயது இளைஞன் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை இரவு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி விவேகானந்த பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கைதானார்.

கைதானவர் கல்லடி பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் , இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான பிரியங்கர பிரசன்ன நிமேஸ் பியுமகே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை  விநியோகித்த 22 வயது இளைஞன் கைது
மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயது இளைஞன் கைது