9A சித்தி பெற்ற மாணவர்கள்! கல்முனை பெரிய பள்ளிவாசலினால் நிகழ்த்தப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு!

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை – 2024ல் ஒன்பது பாடங்களிலும் ‘A’ விஷேட சித்திகளைப் பெற்று சாதனை புரிந்த கல்முனையைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விஷேட நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 18.07.2025 அன்றைய ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

சாதனை புரிந்த மாணவர்களின் வெற்றியையும், பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டி கெளரவிக்கும் வகையில் நம்பிக்கையாளர் சபையினால் ஜும்ஆ தொழுகையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்நிகழ்வானது மாணவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கவும், சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் அமைந்தது.

நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ் ஷெய்யித் மஷ்ஹூர் தங்கள் (அர்ரிபாயி) அவர்களும், நம்பிக்கையாளர்களும் மாணவர்களுக்கு கெளரவிப்பு சின்னங்களை வழங்கி கெளரவித்தனர்.

நிகழ்வில் இம்முறை 9A விஷேட சித்தியைப் பெற்று சாதனைபுரிந்த 22 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன், மாணவிகள் சார்பில் அவர்களது பெற்றோர்கள் கெளரவிப்பை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது கல்முனை ஸாஹிறா கல்லூரி சார்பில் முஹம்மது ஸல்மான் முப்தி முஹம்மது, முஹ்யித்தீன் முஹம்மது ஆசிப், நவ்பர் முஹம்மது அன்ஸப், அப்துல் ஹமீது முஹம்மது ஆசீப், சக்காப் முஹம்மது ஸஜீர் உம் கல்முனை கார்மல் பத்திமா கல்லூரி சார்பில் முஹம்மது ஹில்மி ஸீனத் அனம், கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயம் சார்பில் முஹம்மது நபீர் பாத்திமா ஸிஹா ஹவ்ஸர் அமீர் சம்ரூத் கனாம் ஆகியார் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை சேர்ந்த இஷாக் பாத்திமா மரீஹா, முஹம்மது அஸ்மி ஹயாம் ஸிதா, எம். எம். பாத்திமா தனா, முஹம்மது ராஃபிக் பாத்திமா மிஹ்னா ஸதா, ஸுன்ஷீர் பாத்திமா ஷபீன், ரபாய்தீன் பாத்திமா அப்ரஹா, ஹிதாயத்துல்லாஹ் பாத்திமா இன்கா, முஹம்மது நௌஸத் பாத்திமா பைஹுல் இனா, யாசிர் அரபாத் பாத்திமா அம்னா அரபாத், முஹம்மது அலி கான் பாத்திமா ஷப்கானா, ஜமீல் பாத்திமா இமாதா, அப்துற் ரஹீம் ஜீனத் ஹிபா ஆகியோரும் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் சார்பில் ரிபானுத்தீன் பாத்திமா மின்னா மெஹ்னத், இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயம் சார்பில் அஸ்மிர் முகமது ஷஹீட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக மாணவர்களின் எதிர்கால வெற்றிக்காகவும், சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை கண்ணியத்திற்குரிய மெளலவி ஏ. ஆர். சபா முஹம்மது நஜாஹி அவர்களால் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.